உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பால் கண்கவர் கூந்தல் கறுத்தி ருந்தல் நெளிவொடு கருங்குழல் நீண்டி ருத்தல் அழகொடு கூந்தல் அடர்ந்தி ருத்தல் மென்மை கொண்டு மெத்தென் றிருத்தல் வழிந்தோடும் வெள்ளம் வற்றி விட்டதோர் ஆற்றின் இளமணல் அமைப்பே போலும் படிப்படி யாகப் படிந்திருந்த லாகிய ஐவகைப் பண்புகள் அமைந்த காரணத்தால் அழகிய கூந்தலை ஐம்பால் என்றனர். கொண்டை, பனிச்சை குழல்முடி சுருளெனக் கூறும்ஐ வகையாய்க் கூந்தலை முடித்தலால் அழகிய கூந்தலை ஐம்பால் என்றே திரண்டநூ லறிஞர் தெரிவித் தாரெனல் இருண்ட கூந்தலின் இயல்பறியா தாரே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/274&oldid=926855" இலிருந்து மீள்விக்கப்பட்டது