உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி மணி தேரில்நான் இருந்தாலும்; குயில்கள் கூவும் சிங்காரச் சோலைதனில் உலவி னாலும் போரில்லா இன்பநிலை காணும் அந்தப் புரத்தில்நான் இருந்தாலும், நாட்டு மக்கள் நேரில்வந் தென்னிடத்தில் தங்கள் தங்கள் நிலைமைதனைக் கூறிடலாம் ! நீதி என்னும் வேரில்நீர் ஊற்றுவதே எனக்கு வேலை ! - வேந்தனுக்குக் குடிமக்கள் குரலே வேதம் I பொதுமக்கள் நலமெனக்குப் பெரிதே யன்றிப் புகழெனக்குப் பெரிதன்று: நாட்டுக் காக நிதிவைத்தல் பெரிதன்று; தடுமா றாத நீதிவைத்துக் காப்பதுவே கடின மாகும். விதிசெய்ய வந்தேன்யான்; எனினும் தூக்கி வினைசெய்ய நன்மைசெய்யத் தவற மாட்டேன். மதிவைத்த வானத்தின் கீழி ருக்கும் - மக்களையென் கண்ணுக்குள் வைத்துக் காப்பேன் ! அசோகன் (ஆறாவது கல்வெட்டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/275&oldid=926856" இலிருந்து மீள்விக்கப்பட்டது