பக்கம்:தேன்மழை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதாவின் தேன்மழை

26




அணிலின் சிறியவா லதுபோல் விளங்கும்

செந்தினைக் கதிரைத் தின்னும் மயிலே

நின்பகை கோடை நெருப்பு வெயிலே

நீயெதிர் பார்ப்பது நீருண்ட முகிலே!






ஒரேஒரு கேள்வி உனைநான் கேட்கிறேன்

ஆடுங் கலாபமே ! அருகில்வா; இதைக்கேள்

கருவுற்ற முகிலைக் கண்டதும் நீயோ

ஆடு கின்றனை ; அதுசரி தோகையால்

ஈர முகிலினை ஏன்விசிறு கின்றனை?






சுரந்திடும் ஊற்றுநீர் சுடுமென் றெண்ணி

விசிறுவார் உண்டோ ஒலை விசிறியால்?








அஃறிணை மயிலே ஆராய்ந்து பார்த்துச்

செய்வதைச் செய்தால் சிரிப்புக் கிடமிலை

என்பதை அறிக ! என்மனங் கவர்ந்த

நாட்டியப் பறவையே ! நன்குநீ

ஆட்டுக தோகையை ஆடுக நீயே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/28&oldid=495490" இலிருந்து மீள்விக்கப்பட்டது