உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சுரதாவின் தேன்மழை

28




சங்கத் தமிழ்மதுரை-நகர்

      தாண்டித் தவழ்ந்துவரும் 

மங்கலத் தென்றலிலே-கரு

     வண்டு மயங்குதடி 

பொங்கி வழிந்திடுந்தேன்-அது

     பூக்களின் வேர்வையடி

வெங்கனல் கோடையடி-இது

     வேனில் பருவமடி !






பொரிபெrrரி யாய்மலரைப்-பசும்

      புன்னை மரத்தினில்பார் 

கரிகரி யாய்நிழலை-அதன்

      காலடி சுற்றிலும்பார் 

வரிவரி யாயலையை முழு

      வட்டக் குளத்தினில்பார் 

சரிசரி என்பவளே-சுவை

      தரவரு வாய்மயிலே!





ஊட்டி வளர்ப்பவளே-உயிர்

     ஒவியம் போன்றவளே 

ஏட்டின் கவிதையைப்போல்-நகர்

    எங்கும் புதுமையடி 

காட்டுப் பறவையெலாம்-தமிழ்க்

    காதல் புரியுதடி 

வாட்டம் தவிர்த்திடடி-எனை

     வந்து தழுவிடடி !
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/30&oldid=495492" இலிருந்து மீள்விக்கப்பட்டது