உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயில்



குக்கூவெனக் கூவிடும் பூங்குயிலே

     குரலால்புகழ் தேடிடும் பூங்குயிலே

நக்கீரனைப் பாடும் பூங்குயிலே

    நல்லோர்பெயர் சொல்லுக பூங்குயிலே!





நிழல்தங்கிய சோலையில் கூவிடுவாய்

    நிறமேறிய மாந்தளிர் கோதிடுவாய்

எழில்தங்கிய தீங்கனி தின்றிடுவாய்

    இசையால்புவி மாதரை வென்றிடுவாய்!






வெயிலாடியுன் மேனிக றுத்ததுவோ

     விளையாடியுன் பார்வைப ழுத்ததுவோ 

மயில்தான்கும ரேசனின் வாகனமோ

    மணமேடையு னக்கெது மாமரமோ!





என்னைத்தெரி யாதவ ரோபலபேர்

     என்னைக்குறை கூறிடு வார்சிலபேர்

உன்னைத்தெரி யாதவ் ரேயிலரே

     உயிரோவிய மே!முகி லின்பகையே!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/31&oldid=495493" இலிருந்து மீள்விக்கப்பட்டது