உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலா


('தெள்ளுதமி ழுக்குதவு சீலன்' என்னும் காவடிச் சிந்து மெட்டு)


ஆசைகொண்டு விண்வெளியின் மீது-மதி

      ஆடையின்றி யேவுலவும் மாது-முகில் 

ஓசைகொண்ட மண்டலத்தில்

           ஊர்ந்துலவி வாழ்ந்துவரும்
                     ஊமை-வெள்ளி
                     ஆமை!




தேசமெல்லாம் சுற்றிவரும் தெப்பம்-குளிர்

       திங்களொரு சங்மகுணி அப்பம்-சிலர்

பூசலுக்கும் ஏசலுக்கும்

               பொங்கியெழுங் காதலுக்கும்
                         பொறுப்பு-நிலாச் 
                          சிரிப்பு!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/32&oldid=495494" இலிருந்து மீள்விக்கப்பட்டது