பக்கம்:தேன்மழை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போலி உடும்பு


பலன் சொல்லிப் பொழுது போக்கும்

      பல்லியே! கூரை வீட்டில் 

உலவிக்கொண் டிருக்கும் போலி

       உடும்பேநீ நலமா? எல்லாம் 

நலந்தானா? எனக்கே தேனும்

       நற்செய்தி வருமா? கொல்லி

மலைமகங்கை நிலவின் தங்கை

      வாய்ப்பாளா மனைவி யாக?





சொல்செயும் புலவ ரெல்லாம்

     துன்பத்துள் துரங்கு கின்றார் 

நல்லவர் எல்லாம் நாட்டில்

     நலிகின்றார் ஆனால் இங்கே

அல்லவர் பெருகி வீண்வாய்

     அளக்கின்றார் அதனால் தானோ 

பல்லியே நின்சொல் லுக்குப்

    பலனுண்டென் கின்றார் போலும்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/38&oldid=495502" இலிருந்து மீள்விக்கப்பட்டது