உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

                                                                                பூம்புகார்


மழைகொண்ட கார்கா லத்து

     மாமுகி லெனயீந் தோரும் 

குழைகொண்டு மனையில் மேய்ந்த

     கோழியை விரட்டி னோரும்

பிழைகொண்ட செயல்செய் யாத

     பெரியரும்; பாய்ந்த பார்வை 

வழிகண்டு காதல் கொண்டு

     வாழ்ந்தோரும் வாழ்ந்த மூதூர்!




செங்குத்து மலைகள் போன்று

     செந்நெலைக் குவித்தும்; வந்த

வங்கத்துப் பண்டம் பெற்றும்

     மணிக்கடல் முத்தை விற்றும் 

தங்கத்தை மலர்க ளாக்கித்

      தக்கார்க்குப் பரிச ளித்தும் 

சங்கத்துச் செய்யுள் செய்த

      சான்றோரை ஈன்ற மூதூர்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/37&oldid=495501" இலிருந்து மீள்விக்கப்பட்டது