உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதாவின் தேன்மழை

34



'துகிர்துகிர்' என்னும் ஓசை

      துகில்விலை ஓசை; பூவை 

'முகிர்முகர்' என்னும் ஓசை

      மொய்த்தவர் ஓசை; நல்ல 

'நகர்நகர்' என்றும்; சற்றே

       நகர்நகர் என்றும், நீபோய்ப் 

'பகர்பகர்' என்றும் ஒசை

       பரந்தபொன் னகர மாகும்!





சீரோடு நீண்டு சென்ற

      தெருக்களில் தருக்கள்; கோவில்

தேரோடும் வசந்த வீதி

      தென்புறம் சமணர் பள்ளி

ஊரோடும் மழைநீ ரோடும்

      ஒற்றுமை கொண்ட பொன்னி

நீரோடு நேசங் கொண்ட

      நெய்தல்நீர் நகர மாகும் !






பிறைமுக வடிவம் காட்டும்

      பெருங்கடல் விரித்த நீரில் 

அறிமுகம் கொண்ட கப்பல்

     ஆனைபோல் அசைந்தே நின்ற 

துறைமுக நகரம்; உப்புச்

       சுவைநீரும் பொன்னி யாறும் 

மறைமுகம் ஏது மின்றி

       மயங்கிய திணையூ ராகும்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/36&oldid=495500" இலிருந்து மீள்விக்கப்பட்டது