பக்கம்:தேன்மழை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூம்புகார்


கல்லினால் எல்லை காட்டிக்

     காதலால் இதயங் காட்டி 

வில்லினால் வீரங் காட்டி

     வென்றபின் ஈரங் காட்டிச்

சொல்லினால் நீதி காட்டிச்

     சோழர்கள் ஆண்டு வந்த 

தொல்புகார் நகரம் கீர்த்தி

     துரங்காத நகர மாகும்! "





மங்கல மனைகள்; ஆடல்

       வளர்கலைக் கூடம்;நல்ல

சங்கநூற் புலமை மிக்கோர்

       சந்திக்கும் 'வார்த்தை வீடு' 

தங்குதற் காகச் செய்த

        தனிமனை பலவற் றோடு 

பொங்குசெந் தமிழி ருந்து

        புறங்காத்த நகர மாகும்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/35&oldid=495498" இலிருந்து மீள்விக்கப்பட்டது