உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரை மீன் புதியபுனல் பொங்கிவரக் கண்டு, மாந்தர் பூரிக்க, கோவேந்தன் கரிகாற் சோழன் நதிநிதியை வரவேற்று, வெள்ளம் துள்ள நடந்துவரும் காவிரிக்கு விழாக்கொண் டாட மதிமதுரப் புலவரெலாம் புகழ்ந்து பாட வரலாற்றுப் பேரழகி ஆதி மந்தி, ஏதுகைவரல் போலடுத்து வந்தாள்; அத்தி என்பானோ, மோனையைப்போல் முன்னேவந்தான். 'பாடுதுறை அறிந்தவளே காப்பி யத்தின் பலதுறையும் அறிந்தவளே அனிச்சப் பூவே ஊடுவது காமத்திற் கின்பம் என்னும் உறவுதுறை இரவுதுறை அறிந்த மாதே! ஆடுதுறை அதுதானோ?" என்று கேட்டான். ஆணிப்பொன் மேனிமங்கை ஆம்ஆம்' என்றாள். கூடுதுறை அறிந்தவனும் கோதை மாதும் குளிர்ந்தகழார்த் துறைநோக்கி நடக்க லானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/45&oldid=926861" இலிருந்து மீள்விக்கப்பட்டது