பக்கம்:தேன்மழை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 46 பந்தெனவே காவிரியில் மிதந்தான்; நீரில் பாராங்கல் போலமிழ்ந்தான்; சேனை யானைத் தந்தமென மேல்நோக்கி எழுந்தான்; அத்தி தத்தளித்தான்; தமிழரசி தரைமீ னானாள். கொந்தளித்த வெள்ளத்தில் மறைந்து போன கோமானை, விழிவிளக்கால் தேட லானாள்; செந்தணலில் தளிரானாள், தீயில் வெந்த சிறுகயிறு போலானாள்; ஒட லானாள். ஓடிக்கொண் டேயிருந்த நதியை நோக்கி ஓடிக்கொண் டேயிருந்தாள், வாடிக் கொண்டே! வாடிக்கொண் டேயிருந்தாள், சூறைக் காற்றின் வசப்பட்ட கப்பலைப்போல் ஆடிக் கொண்டே! ஆடிக்கொண் டேயிருந்தாள் அழகி, ஆற்றின் அடிநீரில் மறைந்தவனைத் தேடிக் கொண்டே! தேடிக்கொண் டேயிருந்தாள் ஆதி மந்தி சிந்தாத கண்ணிரைச் சிந்திக் கொண்டே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/48&oldid=926863" இலிருந்து மீள்விக்கப்பட்டது