பக்கம்:தேன்மழை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணை மோனை வீரவெறி யோடெதிர்த்து, நின்று வென்ற விளங்குதினை வேந்தேகேள்! இவர்யார் என்றால் ஈரமலர் முல்லைக்குத் தங்கத் தேரும் இரவலர்க்கு வயல்வரிசை ஊரும் ஈந்த - மாரிமழை பாரிவள்ளல் மகளிர்; அந்த - மன்னவனின் தோழன்யான்; எனவே இந்தப் பேரவையின் திரைமறைவில் அமர்ந்தி ருக்கும் பேரழகு மங்கையரென் மகளி ராவர். நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று நினைப்பவரெல் லாங்கடையர் மடையர், மேனி நிறத்தாலே அந்தணர்கள் சிறந்தா ரேனும் நினைப்பாலே உயராதார் மேலோர் ஆகார். அறத்தாலே சிறந்தோன்யான் வேள்வி செய்யா அந்தணன்யான் ஆராய்ந்து செய்யுள் செய்யும் திறத்தாலே சிறந்தோன்யான், குறிஞ்சி பாடும் திறன்மிகுந்த புலவன்யான் கபிலன் ബ്ലേ?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/49&oldid=926864" இலிருந்து மீள்விக்கப்பட்டது