உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 48 அருந்துதற்கே உதவாத நீரைப் பெற்றும் அழியாத மரபுடைய அலைகள் பெற்றும் திருந்துதற்கோ, வாயடங்கித் துங்கு தற்கோ தெரியாத கரியகடல் நீரை நாடிப் பொருந்துதற்கு விரைந்தோடும் நதியும், வண்ணப் பூவுதிரும் சோலைகளும் சூழ்ந்த நாட்டை வருந்துதற்கோ, இருள்குழ்ந்த ஆட்சி யென்று வரைவதற்கோ வழியின்றி ஆளும் வேந்தே! மலைமுனிவன் பேரருளைப் பெற்ற வேளிர் மரபினிலே வந்தவன் நாற்பத் தெட்டுத் தலைமுறையைத் தாண்டிவந்த 566ುಖಿ; போரில் தனிவீரங் காட்டியவன்; குருதி யுண்ட இலையுடைய வேல்நின்வேல்; மையல் யானை - ஏறுகின்ற இருங்கோவேள், செவ்வேள் நீயோ புலிகடிமால் பொய்யாத புலவர் கையில் பொன்பரப்பும் மதுமாலை மன்னர் மன்னன். விழாநகர ம்: புலிப்பகைவர் தாக்கி னுங்க விழாநக்ரம்; புண்தோளா டவர்வாள் வீரம் விழாநகரம் நதிநகரும் நகரம் வெற்றி விழாநகரம் மாற்றார்க்கு மண்டியிட்டுத் தொழாநகரம் தமிழ்நீதி நகரம் துன்பம் - .. தொடாநகரம் பசியாலும் பிணியி னாலும் அழாநகரம் அறம்பொருளோ டின்பம் மூன்றும் அறாநகரம் அரசேநின் நகர மாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/50&oldid=926865" இலிருந்து மீள்விக்கப்பட்டது