உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 சமணன் சாதித்தான் 'கலைதேர்ந்த விலைமாதர் தொடுதோள் போன்று கற்பார்க்கெல் லாம்மிக்க எளிதாய், அந்த விலைமாதர் உள்ளம்போல், திட்ப நுட்ப விளக்கமெலாம் அறிதற்கே அரிதாய், நல்ல நிலைமாதர் கற்பெனவே சிறந்த தோர்நூல் நிதந்தாய்: சுவைசிந்தா மணியைத் தந்தாய்! தலை, கால், கை, இவற்றையெலாம் காத்தோர் செத்தார் தமிழ்காத்தோர் வரலாற்றில் செத்த தில்லை! வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்ப தில்லை. வெறும்பாட்டைத் தமிழ்ச்சங்கம் சேர்ப்ப தில்லை, மாற்றறியாச் செம்பொன்போற் சிறந்த சிந்தா மணி, தமிழுக் கணி' என்றான்; விரிந்த வைகை ஆற்றருகே தமிழவையில் விற்றி ருந்தோர் அனைவருமே.அவன்பேச்சை ஆமோ தித்தார். நாற்றிசையும் புகழ்பொங்க வாழ்ந்த வேந்தன், நல்லகுறுந் தொகைப்புலவர் தம்மை நோக்கி. 'அப்பத்தைச் சுடும்போது பொத்தல் வந்தே அதன்நடுவில் தானாக அமைதல் போலே, ஒப்பற்ற காவியத்தில் எங்கி ருந்தோ ஓடிவந்து கருத்துக்கள் குதிப்ப தில்லை. ஒப்பிட்டுச் சொல்லுதற்குத் திறமை வேண்டும். உழைத்தார்க்கே அத்திறமை வந்து வாய்க்கும்; உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற உவமையில்லாப் பாடலுக்கும் பெருமை யில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/61&oldid=926876" இலிருந்து மீள்விக்கப்பட்டது