பக்கம்:தேன்மழை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 60 'திருத்தாமல், திருந்தாமல் மாற்ற மில்லை. திருத்துங்கள், தீட்டுங்கள்; புரியாப் பாடல் ச்ெரிக்காத சோறாகும்; மனித னுக்கே தேவையற்ற சாதிமதம் போன்ற தாகும், உருப்போடும் பண்டிதரால் மறும லர்ச்சி ஒருநாளும் உண்டாகப் போவ தில்லை, கருத்தூன்றி ஆராய்ந்து முயற்சி செய்து கலைத்தொண்டில் தோற்றாலும் பெருமை யுண்டு! கத்துகடல் நீராலும் கயவ ராலும் கனலாலும் கண்கலந்த துக்கத் தாலும் எத்தனையோ நூற்களை நாம் இழந்து விட்டோம்! இல்லையெனில் ஒருநூலா இரண்டு நூலா, பத்திரண்டா யிரங்கோடி நூற்க ளன்றோ பைந்தமிழர் கைவசத்தில் இருந்தி ருக்கும்; வித்திடுவீர்!" என்றுரைத்தான். புலவ ரெல்லாம் விழித்தெழுந்தே செழித்ததமிழ் வளர்க்க லானார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/62&oldid=926877" இலிருந்து மீள்விக்கப்பட்டது