பக்கம்:தேன்மழை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடத்திலும் கூடத்திலும் கூடத்தில் நின்றி ருந்தான் கோவலன்; நிமிர்ந்து யர்ந்த மாடத்தில் நின்றி ருந்தாள் மாதவி! குன்றத் தென்றல் ஆடிற்றாம்! அவள்பட் டாடை அசைந்ததாம்! அவிழ வில்லை. பாடிற்றாம் வீணை வண்டு! பாடினாள் மையல் கொண்டு! விண்கொண்ட சுடரோன் துரங்க, வெண்ணிலா விழிக்க, விண்மீன் எண்கொண்டு குளிர்ந்த வெள்ளி இரவிலே இடையிலாதாள் கண்கள்போய் அவனைத் தீண்ட, காதல் நோய் கொண்டோன் வேண்ட, எண்ணங்கள் ஏணி யாக இருவரும் ஒருவ ரானார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/64&oldid=926879" இலிருந்து மீள்விக்கப்பட்டது