உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 62 தோனிக்கோர் துடுப்பே போன்றான் தொகைமலர் மாதை நோக்கி ஆணுக்குப் பெண்ணே போர்வை அணங்குக்கும் ஆணே போர்வை மாணிக்க மணியே மாடே மலர்ந்தபூக் காடே! என்றான். நாணிக்கண் புதைத்த நங்கை நானென்ன மாடோ? என்றாள். மாடென்று சொன்னேன், மின்னும் மங்கையே பொங்கி விட்டாய் மாடென்னும் தமிழ்ச்சொல் லுக்கு மற்றுமோர் பொருளு முண்டு. மாடென்றால் செல்வம், கண்ணே' வருந்தாதே! என்றான். பார்வைப் பாடத்தின் தலைவி நெஞ்சம் பாரியின் சுனையா யிற்றே! நிறைந்தநாள் நிலவே! கேளாய் நின் அங்கம் கட்டித் தங்கம் குறுந்தொகைப் பற்கள் முத்தின் குடும்பமே! நெருங்கி நீண்டு நிறந்தரும் தினது கூந்தல் நெடுந்தொகைச் செல்வம் அன்றோ சிறந்தசெம் பொன்னே! சந்தச் செந்தமிழ்ப் பண்ணே! என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/65&oldid=926880" இலிருந்து மீள்விக்கப்பட்டது