உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மாடத்திலும் கூடத்திலும் மாவென்றான். மையல் தையல் மாவென்றால் பெருமை என்றாள் மாவென்றான். செங்கை மங்கை மாவென்றால் கருமை என்றாள். மாவென்றான். "குதிரை வண்டு மாமரம்" என்றாள். நீதே மாவென்றான். நான்மான் என்றாள். மானுக்கேன் ஆடை? என்றான்! அடிப்படை மானங் காக்க உடுத்துகின் றோமே யன்றி உடையொடு பெண்ணோ ஆனோ உலகினில் பிறப்ப தில்லை. இடையிலேற் பட்ட தேஇவ் வழக்கமென் றெடுத்துக் காட்ட இடையினில் ஆடை கட்டிக் கொண்டுளேன் என்றாள் கோதை! மாடத்தை விட்டு, வேங்கை வீரனும் வீணை மாதும் கூடத்தை அடைந்தார் அங்கே குலவினார் நிலவில். எங்கோ ஒடிப்போய் விட்ட தேயென் ஒளியிதழ் வண்ணம் என்றாள். தேடிப்பார் விழியில் என்றான். - சிவந்தவள் சிரிக்க லானாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/66&oldid=926881" இலிருந்து மீள்விக்கப்பட்டது