பக்கம்:தேன்மழை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 சித்துர்ச் சாம்பல் இலைகளுக்குப் பின்புறத்தில் காய்கள் போன்றும் இருள்முகிலின் பின்புறத்தில் நிலவு போன்றும் மலைகளுக்குப் பின்புறத்தில் சிற்றுர் போன்றும் மறைவாக அரண்மனையில் வாழ்ந்து வந்த கலைமடந்தை அக்கொடியோன் காண வேண்டிக் கண்ணாடி முன்வந்து நடுங்கி நின்று தலையெனுந்தா மரைகாட்டி அல்லி காட்டித் தங்கத்தேர் வடிவழகைக் காட்ட லானாள். கண்ணேபோற் சிறந்தவளைச் சித்துர் முத்தைக் கண்ணாடி தனிற்கண்டு காமங் கொண்டு புண்ணானான். புதுக்காம ராச னானான். பூவையிவள் தேவையிவள் இப்பூ வுக்கோர் வண்டாகி விடவேண்டும் இன்றேல் என்றன் வாழ்நாளை விடவேண்டும்; இவள்கைப் பட்டால் மண்மேடும் பொன்மேடாய் மாறும்! வான மழைத்துளியும் வலம்புரிமுத் தாக மாறும்! நிழலழகே நெஞ்சத்தை மயக்கு மாயின் நேர்முகு வாட்டாமல் விடுமோ என்னை? மழையழகுக் கூந்தலில்மென் மலர்கள் குட்டி மடிநடுவில் உடைபோன்று படிந்து மூங்கிற் கழியழகுத் தோள்தொட்டுத் தழுவி இன்பக் கடலாடும் நாளெந்நாள் என்றே எண்ணி விழிகளினால் அவளழகைக் கெளவிக் கொண்டு வெறியோடு விடைபெற்றான் புடைவைப் பித்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/70&oldid=926885" இலிருந்து மீள்விக்கப்பட்டது