உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 68 வடிவழகன் பீமன்சிங் அலாவு தீனை வழியனுப்பி வைப்பதற்கு வந்த போது கொடியவனோ அன்னவனைச் சிறையில் வைத்தான். குலக்கொடியோ மன்னவனை மறுநாள் அந்தி முடிவதற்குள் தந்திரமாய் மீட்டு வந்தாள். முன்கோபம் பின்கோபம் இரண்டும் பொங்க நெடுங்குரலோன் அலாவுத்தீன் சித்துரர் நோக்கி நிலம்நெளியப் பெரும்படையை நடத்திச் சென்றான். ஆரணங்கை அடைவதற்கு மீண்டும் யுத்தம். ஆயுதங்கள் தரும்சத்தம் கத்தி முத்தம். வீரரெல்லாம் தாய்நாட்டுக் காகச் செத்தார். வேல்வேந்தன் தன்மனைவிக் காகச் செத்தான். பாரதப்பெண் பத்மினியோ, கற்பைத் காக்கப் பழுத்தபலாச் சுளைத்தீயில் பாய்ந்து செத்தாள். சீரமைந்த மாணிக்க மகுட மங்கை செத்ததற்குச் செத்திட்டார் சித்துார்ப் பெண்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/71&oldid=926886" இலிருந்து மீள்விக்கப்பட்டது