பக்கம்:தேன்மழை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 70 இருநெஞ்சம் கொண்டவனின் மகளே! தெங்கின் இளநீரே இனிநமக்குள் ஆண்பால் பெண்பால் பிரிவன்றி வேறெந்தப் பிரிவு மில்லை பேதமில்லை இருசமய விளக்க மில்லை திருமங்கை ஆழ்வாரின் நெற்றிக் கோடு தேவையில்லை நீதேவை என்ப தாலே சரிஎன்னைப் பார்பெண்ணே எனக்குள் னோடு சம்பந்தம் உண்டதனால் நான்சம் பந்தன்! மதமென்ன மதம்பெரிய மதம்மா துன்சம் மதமிருந்தால் எனக்கதுவே போதும்; புத்த மதமென்ன புத்தமுத மோகெள மார மதம்சமணம் இருளறுக்கு மோஎல் லாம்வாய் மதமன்றி வேறென்ன? உயிரெழுத்து வந்தால்குற் றியலுகரம் மெய்விட்டோடும். மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும். மதிபொங்கப் பொங்கவெறி மதங்கள் மங்கும்! இரட்டையர்நாம் இணையெதுகை இனிநாம் நீயோர் ஈரவயல் நானோர்ஏர் உழவன், கட்டில் . சரித்திரத்தின் சாசனமே அன்-அம் என்னும் சாரியையே தொடுபதமென் றழைக்கும் GатGрі பருப்பளவு குற்றத்தை இந்த நாடு பனையளவாய்ப் பேசுமென்ப தறிவேன்; இந்தக் குருட்டுலகம் குறும்புலகம் இனிமேல் என்னைக் குறைகூறும் கூறட்டும் கவலை யில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/73&oldid=926888" இலிருந்து மீள்விக்கப்பட்டது