உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 காதல் மேகம் எப்போதும் இனிப்பவளே! 'ழ'கரம் என்னும் எழுத்தேபோற் சிறந்தவளே! பொதுச்சீர் மாதே உப்பே பெண் ஒவியமே தலைமை தாங்கும் உவமையணி போன்றவளே! எனக்கு வாய்த்த முப்பாலே! கரிக்காத கடலே செம்பொன் முத்திரையே முழுமதியே என்றன் வாய்க்குத் தப்பாத மூவகைச்சீர் கனியே! சேற்றுத் தாமரையே கூந்தல்கொண்ட பிறையே கேளாய். தென்கடலில் முத்திருக்கும் செல்வ மேl திறக்கும்வாய் வாசலிலே முத்தி ருக்கும் தென்மலையில் மணக்கும்சந் தனமி ருக்கும் சிற்றின்பத் தனமுன்ற னிடமி ருக்கும் தென்திசையில் குளிர்தென்றல் படுத்தி ருக்கும் செவ்வல்லி நின்உதட்டில் படுத்தி ருக்கும் தென்னகத்தில் பேரறிவு மிகுந்தி ருக்கும் • தேன்சுவைநின் புதுப்பேச்சில் மிகுந்தி ருக்கும்: நிதங்குளிரும் நிலாமுகம்; அல்லிப் பூவை நினைவூட்டும் வாயிதழும் மெல்ல மெல்ல ஒதுங்குபதங் கொண்டகொடி இடையும் பார்வை உணர்ச்சிகளும் ஒய்யார நடையும் காலின் சதங்கைதரும் சங்கீதச் சுவையும் தேமாந் தளிர்நிறமும் தமிழமுதப் பேச்சும் பூச்சும் மதங்களையே நம்பாத என்றன் நெஞ்சை மயக்குதடி நச்சினவர்க் கினிய மாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/74&oldid=926889" இலிருந்து மீள்விக்கப்பட்டது