பக்கம்:தேன்மழை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்மழை 72 முத்திநெறி யறியாதார் மூர்க்கர் என்றால் முத்தநெறி அறியாதார் iண ரன்றோ? கத்திநெறி வீரரிடம் போய்ச்சே ரட்டும்! காதல்நெறி நம்நெஞ்சில் உறவா டட்டும்! பக்திநெறி தலைநரைத்த பின்னர் வந்து பதியட்டும் இதயத்தில் மெத்தை ஏறும் வித்தையெலாம் கற்றவளே! திருவா னைக்கா வில்விளங்கும் திருவில்லே தஞ்சை நெல்லே! பூவெல்லாம் பொன்னேநின் உடலில் மீது பூத்திருக்க நீயவற்றைப் பார்த்தி ருந்தும் காவெல்லாம் சென்றுசென்று நின்று நின்று கால்நோகப் பூப்பறித்துச் சூடும் பெண்ணே! நாவில் நெஞ்சில்நீ அஞ்ச னாட்சி நல்லதமிழ்ப் பாடல்நீ அன்றோ என்றான். ஒவம்மாள் ஈன்றமகள் சிரிப்பை ஈன்றாள். உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/75&oldid=926890" இலிருந்து மீள்விக்கப்பட்டது