பக்கம்:தேன்மழை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல தீர்ப்பு பாதிநிலா வடிவமுள்ள படிகள்; அந்தப் படிகளின்மேல் காவலர்கள்; கற்று வல்ல மூதறிஞர் ஒர்பக்கம் மக்க ளோடு முழுத்திருடன் ஒர்ப்க்கம் அவனை நோக்கிக் காதகனா நீ என்று கேட்டான் சீதக் காதியெனும் காயற்பட் டினத்து வள்ளல். காதுடையேன் அகமுடையேன். எனவே யானோர் காதகனே என்றுரைத்தான் அந்தக் கள்வன். திருடியவன் திருடியவன் என்கின் lர்கள் திருடன்தான் திருடன்தான் மறுத்தே னில்லை திருடுவது குற்றமெனில் செல்வ மெல்லாம் சிலரிடம்போய்ச் சேருவதும் குற்ற மாகும். அரசியலின் அதிபதிகள் ஏற்றத் தாழ்வை அகற்றாமல் எல்லார்க்கும் எல்லாம் ஈந்தே சரிசமமாய் நடத்தாமல் ஏய்க்கு மட்டும் தரணியிலே குற்றங்கள் நிகழ்ந்தே தீரும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/76&oldid=926891" இலிருந்து மீள்விக்கப்பட்டது