உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 74 தென்கோடித் திருடன்யான் ஆல யத்தில் திருடியுள்ளேன் திருமங்கை ஆழ்வார் போலே! அன்றாடம் கன்னியரைக் கற்ப ழித்தே ஆனந்தம் கண்டோன்யான் கோபாட் போலே! முன்கோபம் கொண்டவன்யான் பாண்டி நாட்டு х முடிவேந்த னாம்தந்து மாறன் போலே; பொன்னாசை எனக்குண்டு வணிகர் போலப் புகழ்வெறியும் எனக்குண்டு சேரர் போல! வில்லூரில் விசலூரில் தித்தன் என்பான் வீற்றிருந்த உறையூரில் வேம்பத் துரில் மல்லூரில் பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த மறைக்காட்டில் குளிர்துங்கு குற்றா லத்தில் பல்லூரில் திருடியவன் இன்றோ காயற் பட்டினத்தில் அகப்பட்டேன் வெட்டுப் பட்டேன். நல்லோரே நான்நொண்டி யாகி ിലGL് - நாற்சீரில் கடைசிச்சீர் குறைந்தாற் போல! பட்டினத்தார் துறவறநூல் பாடி வைத்த பாட்டினத்தார்; மங்கையரோ மென்மை ய்ான பட்டினத்தார்; தாலாட்டுப் பாடல் பாடும் . பாட்டினத்தார்; பூமானே நீயோ காயற் பட்டினத்தார்; காப்பியங்கள் இயற்று கின்ற பாட்டினத்தார்க் குதவிசெய்யும் பட்டி னத்தார்! பட்டினத்தார் கொள்கையினைத் தாக்கித் தாக்கிப் பாட்டெழுதும் நான்நாகைப் பட்டி னத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/77&oldid=926892" இலிருந்து மீள்விக்கப்பட்டது