உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 நல்ல தீர்ப்பு திருடுகின்ற இருள்மனிதன் எனினும் யானோர் தேன்.கவிஞன் என்நெஞ்சில் எழுந்த பாடல் அருமருந்து போல்நோயை நீக்கும் பாடல் அப்பாடல் குப்பைக்குப் போகாப் பாடல் பெருமையில்லாப் பாட்டெழுத மாட்டேன் என்னைப் பின்பற்றி எழுதுதற்கோர் கூட்ட முண்டு. கருவடைந்த பெண்பெறுவாள் குழந்தை; என்றன் கவிதைகளும் என்புகழ்க்குத் தாயாய் நிற்கும். சுனையொன்றில் பூத்தபல மலர்கள் போன்று சூழ்ந்துள்ள புலவர்களே நீங்கள் எல்லாம் பனியென்யீர் நிலாவழிக்கும் வியர்வை' என்பேன். பாடையென்பீர் காற்கழிந்த கட்டில் என்பேன். கனியென்பீர் விதைக்குடும்பம் என்பேன் நீலக் கடலென்பீர் மண்மகளின் ஆடை என்பேன். தனிநின்று புதுமைபல செய்யும் என்னைத் தக்கையென்று நினையாதீர் என்றான் கள்வன். பொன்பெற்ற நிறம்பெற்ற சீதக் காதி புகழ்பெற்ற புதுக்கள்வன் முகத்தை நோக்கி கன்னக்கோல் கள்வன்நீ எனினும் வெல்லும் கல்விக்கோல் கவிஞன்நீ இந்த நாட்டில் உன்னைப்போல் கற்றோரே,குற்றஞ் செய்தால் உணராதார் தீமைகளேன் செய்ய மாட்டார்! இன்றைக்கு நாம்செய்யும் தீமை நம்மை என்றேனும் கட்டாயம் சுட்டே தீரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/78&oldid=926893" இலிருந்து மீள்விக்கப்பட்டது