உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரைப்பட வசன வானத்திலும் இந்தக் கதிரவன் தனது பொற்கிரணங்களை இளமையில் தவழவிட்டு அத்துறையையும் ஒளிமயமாக்கியது.

அருமைக் கவிஞர் சுரதா ஆயிரம் பிறை கண்ட ஆண்டு இந்த ஆண்டு! இவ்வேளையில் அவரது 'தேன் மழையை' வெளியிட்டு அவரது திருவடிகளில் காணிக்கையாக்குவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தாழ்பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வரிய நூலை வெளியிட பல்லாற்றானும் உதவிய உவமைப்பாவலர் சுரதா அவர்களின் மைந்தனார் கவிஞர் திரு. சுரதா கல்லாடன் அவர்களுக்கும் உயரிய வகையில் அச்சியற்றித்தந்த சேகர் அச்சகத்தாருக்கும் என்றென்றும் நன்றி.

அன்புடன்
ஆ.திருவாசகன்
அருள்-சுடர் பதிப்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/8&oldid=495549" இலிருந்து மீள்விக்கப்பட்டது