உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமணன் வான்மீது செங்கதிரோன் நகர்ந்த நேரம் மலைமூங்கில் தலையசைத்த பாதை யோரம் பேன்பார்த்த கருங்குரங்கைத் துக்கி வைத்துப் பெருமையோடு தலையசைத்த மரங்கள் ஓர்பால் தேன்.வாழை செவ்வாழை பாயும் வேங்கை சிற்றடிபோல் அவ்வாழை மரத்தின் காய்கள் மான்கூட்டம் நீரோடை ஒட்டம் ஓர்பால் மலைப்பன்றிப் போர்க்காட்சிப் படலம் ஒர்பால். பம்பம்பம் பம்பம்பம் பம்பம் என்றே பம்மையெலாம் ஒலிசெய்ய மலைகளோடு சம்பந்தங் கொண்டகுளிர் அருவி யெல்லாம் தந்தத்திந் தோமென்றே ஒசை செய்யக் கொம்புத்தேன் வடித் துக்கொண் டிருந்தாள் ஒர்பெண். குமணவள்ளல் வெறுந்தரையிற் படுத்தி ருந்தான். சம்பத்தைப் பெறவேண்டிச் சாத்தன் என்பான் தனியேயவ் வழியாக நடந்து சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/80&oldid=926895" இலிருந்து மீள்விக்கப்பட்டது