உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 78 நடையதுகற் றிடுமுன்பே கொடைகற் றோனை ノ நற்புலவன் பெருஞ்சாத்தன் காட்டிற் கண்டான். கொடியசையக் குரலோங்க நாட்டை யாண்ட குமணவள்ளல் தன்தம்பி சூழ்ச்சி யாலே முடியிழந்து முன்னேற்ற மிழந்து வேங்கை மூச்சுவிடும் கானகத்தில் வாடக் கண்டு தடையுடைய வாழ்வுடையோன் கலங்கி நின்றான். தமிழ்க்கவிநான் உமைக்காண வந்தேன் என்றான். வேல்வேந்தன் அன்னவனை உற்று நோக்க வெப்பத்தால் வாடியவன் அவனை நோக்கிப் பால்தீர்ந்த முலைசுவைத்தும் பசிதீ ராத பாலகனோ தன்தாயின் முகத்தை நோக்க நூல்நூத் னம்போலே இளைத்த மங்கை நூறுமுறை என்முகத்தை நோக்கி நிற்க கால்நோக ஓடிவந்தேன் குமண மன்னா கண்ணிரை உம்மிடத்தில் காட்ட வந்தேன். பலகளைகள் நிறைந்திருக்கும் கார ணத்தால் பலாப்பழத்தைப் பலவென்றார். அதுபோல் மங்கை பலபுதல்வர் தமையின்றாள் என்ப தாலே - பலாமனைவி என்மனைவி. முத்துப் பூத்த தலையுடையார் எம்தந்தை அங்க மெங்கும் தசைவற்றி நரம்பெழுந்த தாயே என்தாய் இலர்பலராய் இருக்கின்றோம் கண்ணிர் ஒன்றே எங்கட்குக் காவேரி என்றான் சாத்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/81&oldid=926896" இலிருந்து மீள்விக்கப்பட்டது