பக்கம்:தேன்மழை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 குமணன் நெட்டைமரக் கூட்டஞ்சேர் காட்ட கத்தே - நின்றிருந்த தமிழ்க்குமணன் அவனை நோக்கி எட்டடுக்கு மாளிகையும் நகரும் நாடும் என்வசத்தில் இருக்கையில்நீ வந்தி ருந்தால் ஒட்டகத்தின் காலடியை ஒத்த முத்தும் ஒளிசிறந்த செம்பொன்னும் தந்தி ருப்பேன் திட்டமெல்லாம் நிலநடுக்கத் தாலே சாய்ந்த தேராகி யிருக்கையில்யான் என்ன செய்வேன்! நன்மைநிலை அனைத்தையுமே இழந்தோன் என்னை நாடிவந்த நற்கவியே நீயும் நானும் முன்பனியும் பின்பனியும் ஆனோம். ஈர முகில்மறைத்த நிலவானோம் கவிக்கோ மானே என்னிடம் நீ ஏதேனும் பெறலாம் என்றே இன்றன்றோ வந்துள்ளாய் என்செய் வேன்யான்! ஒன்றுரைப்பேன் அவ்வாறே செய்க" என்றான். ஓங்குபுகழ் பாவேந்தன் உரைப்பீர் என்றான். விலைமிகுந்த முடிசூடி மகிழ்ச்சி யோடு வீற்றிருக்கும் என்தம்பி யிடத்தில் என்றன் தலையதனைத் தந்திட்டால் கோடி செம்பொன் தந்திடுவான் தரித்திரமும் தரித்தி ராது. நிலையுயர நீயுயர நினது நாட்கள் நீடிக்க நெடுந்தமிழ்க்குத் தொண்டு செய்யத் தலையதனைத் தருவதற்குச் சம்ம தித்தேன் தமிழுணர்ச்சிப் பாவலனே கொய்க என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/82&oldid=926897" இலிருந்து மீள்விக்கப்பட்டது