பக்கம்:தேன்மழை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 82 மென்புறாப் போன்ற வேசி மெத்தையில் படுத்தி ருக்க அன்னவன் கட்டி லின்கீழ் அசைவின்றிப் பதுங்கிக் கொண்டான். இன்னிசை வீணை ஓர்பால் இருந்தது. விளக்கும் விடும் மின்னின. வெண்பா ஒன்றை விலைமகள் பாட லானாள். வெண்பாவை முடிப்பதற்கு விலைமகள் திணறும் போது கண்பாவை இழந்த கள்வன் காய்ச்சீரால் நடந்து சென்ற வெண்பாவைப் பூர்த்தி செய்து வெற்றியைத் தேடித் தந்தான். வெண்பாவை விளக்கைத் தூண்டப் பிடிபட்டான் பாட்டுப் பித்தன்! சாயலைக் காட்டும் காம சமுத்திரப் பரத்தை ஆங்கோர் ஆயிரம் கேள்வி கேட்டாள். அதற்கவன் விடைகள் தந்தான். தாயினும் சிறந்த தான தமிழ்கற்றும் சிலையில் லாத கோயில்போல் ஆனேன் என்று கூறினான் இரக்கங் கொண்டாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/85&oldid=926900" இலிருந்து மீள்விக்கப்பட்டது