உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 தலைமலைத் தேவன் நிதியில்லை எனக்கோர் காணி நிலமில்லை வீடு வாசல் எதுவும்நான் பெற்றே னில்லை என்பது வறுமை அன்று. மதிநுட்பம் இலாமை ஒன்றே மாந்தர்க்கு வறுமை யாகும். இதைநன்கு புரிந்து கொண்டால் இல்லையென் றேங்க மாட்டார்! இருப்பினும் பொருளும் பொன்னும் இல்லாரைப் பார்த்துப் பார்த்துச் சிரித்திடும் உலகம் என்னும் செய்தியும் அறிவேன் என்றாள். நெருக்கடி தீர்த்து வைத்தால் நிச்சயம் வாழ்வேன் என்றான். அரித்திடும் வறுமை தீர்ப்பேன் அஞ்சாதீர்! என்றாள் வஞ்சி! மையணி மடந்தை சொன்ன வார்த்தையைத் தேவன் கேட்டுத் தையெனக் குளிர்ந்தான். பின்னர் தமிழ்பற்றிப் பேச லானார். ஐயென விரைந்து தோன்றும் - அழகுவெண் ணிலாவைப் போன்றாள் நெய்யமு தளித்தாள் உண்டான். நேரிழை அவனை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/86&oldid=926901" இலிருந்து மீள்விக்கப்பட்டது