உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்மழை 84 முப்பாலைத் தந்தான் பூத்து மூத்தவ னான தேவன். அப்பாலோர் தேவன் வந்தான். அன்னவன் மணநூல்' தந்தான். திப்புத்தோள் கருவூர்த் தேவன் 'திருவிசைப் பாக்கள் தந்தான். இப்போது நீரோர் தேவர் என்பதால் எதிர்பார்க் கின்றேன். நாராய னாவென் பார்க்கும் நமசிவா யாவென் பார்க்கும் தீராத வினையைத் தீர்க்கும் தேவனே எனச்சொல் வார்க்கும் ஊராரும் எங்கள் வீட்டில் உள்ளாரும் அடிமை, செய்யுள் ஆராயும் பாவா ணர்க்கே அடிமைநான் என்றாள் ஈந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/87&oldid=926902" இலிருந்து மீள்விக்கப்பட்டது