உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாம்பு கொக்கறுகோ, கொக்கறுகோ, கொக்கொக் என்றே கூவிற்றுத் தீக்குடுமிச் சேவல் அந்தச் சொக்கழகி விழித்தெழுந்தாள் வீட்டு வேந்தன்' சொக்கனென்பான் விழிவாசல் திறந்தா னில்லை. பக்குவமாய் நிழல்தனிலே கனிந்த வாழைப் பழம்போன்றான் அன்னவனைத் தொட்டெ ழுப்பச் சொக்கனென்பான் புரண்டபடி விழித்தெ ழுந்தான். சூரியனோ கருக்கிருட்டைக் கிழிந்தெ மிந்தான். படுக்கைதனை விட்டெழவே விரித்த பாயைப் பாவையவள் மெதுவாக சுருட்ட லானாள். வடித்ததமிழ் போன்றவளைச் சொக்கன் நோக்கி வானவரம் பன்நாட்டில் பூத்த பூவே! அடிக்கடிநான் செஞ்சுருட்டி பாடு கின்றேன்; அநுதினம்நீ பாய்சுருட்டிப் பழகு கின்றாய்; தொடுத்தமலர் வாடிவிடும் சங்கப் பாடல் தொகைபோல்நின் மலர்மேனி வாடாதென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/93&oldid=926908" இலிருந்து மீள்விக்கப்பட்டது