பக்கம்:தேன்மழை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9? பாம்பு சேவைக்குச் சிறந்தவளோ அவற்றைக் கேட்டுச் சிரித்தபடி ஆடைதனைத் திருத்திக் கொண்டே பூவென்றால் தாமரையே! என்றாள். அந்தப் பூப்போன்று சிறந்தவள்நீ என்றான் சொக்கன். காவென்றால் குளிர்சோலை என்றாள். அந்தக் காவைப்போல் காப்பவளே என்றான் சொக்கன். நாவுக்குப் பெருமைதரத் தக்க சொல்லும் நற்குணமும் கொண்டவளோ நாணி நின்றாள். திண்ணையிலே அச்சொக்கன் வந்த மர்ந்தான். தித்திக்கும் செந்தமிழின் சாயல் கொண்ட வண்ணமலர்ப் பெண்ணழகி நீர்தெ ளித்து வாசலிலே கோலமிட்டுக் கொண்டி ருந்தாள். பண்ணைவயல் உழவரொடு பேசிக் கொண்டே பாம்பாட்டி அவ்வாசல் அருகில் வந்தே மண்ணமைந்த வாசலிலே மண்டி யிட்டு மகுடியினால் அரவத்தை ஆட்ட லானான். அந்திமதி போன்றமங்கை அவனை நோக்கி அகடுரி எனுமிந்த நாகப் பாம்பு மந்திரத்திற் கடங்கிற்றோ? என்று கேட்டாள். மகுடிக்கே இந்நாகம் அடங்கிற் றென்றான். சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டும் fಲJಹಿತವೆ! TruG77 TED GL-7ವೆ. சிந்தனையைத் தேய்ப்பவர்கள் தீட்டி வைத்த சிறுகதையே இச்செய்தி என்றான் அன்னோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/94&oldid=926909" இலிருந்து மீள்விக்கப்பட்டது