பக்கம்:தேன்மழை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 92 முன்னாளோர் பேரரசன் பரிச்சித் தென்பான் முர்க்கமுள்ள நாகத்தால் இறந்தான் என்பர். தென்னாலி ராமனென்பான் நாகம் தீண்டிச் செத்தானாம்! இவ்வாறு தீமை செய்யும் புன்னாகப் பாம்போடு பழகல் நன்றோ புதியவனே சொல்?லென்று சொக்கன் கேட்க: அன்றாடம் உறவாடிக் கொடுப்போர் இந்த அரவத்தி னுங்கொடியோர் அன்றோ? என்றான். பாம்பென்னும் பெயரிதற்கு வந்த தேனோ பாம்பாட்டி எனக்கேட்டாள். புற்றில் தூங்கும் தாம்பென்னும் பாம்புதனை ஆட விட்டுத் தன்பிழைப்பை நடத்தி வந்தோன் அவளை நோக்கி; வேம்புக்கும் அரசுக்கும் வேர்கள் உண்டு வேங்கைக்கும் மானுக்கும் கால்கள் உண்டு பாம்புக்குக் காலில்லை எனினும் நாகப் பாம்புக்கெல் லாம்புவியே பாத மாகும்! பாம்பெல்லாம் பூமியையே பாத மாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்ற கார ணத்தால் - பாம்புக்குப் பாதம்பூ எனப்பே ரிட்டார். பாதம்பூ என்பதையே நாமெல் லோரும் பாம்பென்று கூறுகின்றோம் தாயே என்றான். பாராட்டி னான்சொக்கன். அவனை நோக்கி வேம்பத்துர் நான்போக வேண்டும் என்னை வெறுங்கையோ டனுப்பாதீர் ஐயா" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/95&oldid=926910" இலிருந்து மீள்விக்கப்பட்டது