உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

கிளைகளில் குதித்தோடிப் பெரிய ஆரவாரங்களை விளைவித்து தேன் மிக்க சிறந்த பலாப்பழங்களைப் பறித்து நுகர்கின்றன குரங்குகள். குரங்குகளைக் கூறி சபலரான சம்சாரிகளின் செயல்களைக் குறிப்பதாகப் புலப்படுத்தும் ஆழ்வாரின் திருவுள்ளத்தைக் கண்டு வியந்து நிற்கின்றோம். ஒரு நிலையில் நில்லாத நெஞ்சினையுடையராய், ஒன்றைவிட்டு மற்றொன் றைப் பற்றும் தன்மையுடையராய், சிறு பலன்களை விரும்புபவர்கள் சம்சாரிகள். இப்படிப்பட்டவர்களின் தன்மையும் குரங்குகளின் தன்மையும் ஒப்புமை கொண்டவை யன்றோ? ஆயினும், இப்படிப்பட்ட சம்சாரிகள் உண்டியே உடையே என்று உகந்து ஒடும் தன்மையராயினும், பலாக் கனிபோன்ற பகவத் குணங்களையும் இடை இடையே அநுபவித்து வாழ்வர் என்பதையும் குறிப்பதாகப் புலப்படுத்தும் ஆழ்வாரின் திறனை வியந்து போற்றுகின்றோம்.

இன்னொரு கோணத்தில் நோக்கினால் திருத்தலத்தின் அருகில் ஒடும் கருடநதியின் (கடில நதியின்) வளமான சூழ்நிலை நம் கண்ணலே படுகின்றது.

“தடம்.ஆர் வரைவ ளந்திகழ் மதகரி மருப்பெடு

மலைவளர் அகில்உந்தித் திரைகொணர்ந்தணையு செழுநதி வயல்புகு

திருவயிந்திர புரமே’

(தடம்ஆர்-குளங்கள் நிறைந்த மதகரி-மதயானைகள்: மருப்பு-தந்தம்; மலைவளர் -மலையில் வளரும்; திரை-அலை; உந்தி-தள்ளி; அணை - சேருகின்ற; செழுநதி அழகிய ஆறு)

என்பது கருடநதியின் காட்சியைக் காட்டும் பாசுரப்பகுதி. கருடநதி வெள்ளமாய்ப் பெருகி வருங்கால் யானைத் தந்தங்களையும், அகில் மரங்களையும், மற்றும் பல பல மணிகளையும் கொழித்துக் கொண்டு வருகின்றது. இந்த ஆறு கழனிகளில் கால்வாய்களாகப் பாய்ந்து அதனை வளமிக்கதாக்கு கின்றது. இந்த ஆற்றில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. ஆறுபாயும் வெற்றிலைக் கொடிக்கால்களில் கணுக்கள் தோறும் வெற்றிலைக் கொடிகள் கிளைக்கின்றன். சோலைகளிலுள்ள பாக்கு மரங்கள் இளங்குருத்துகளை விடுங்கால் சோலை முழுவதும் நறுமணம் வீசுகின்றது.”

20. பெரி. திரு. 3. 1. :8 21. மேலது. 3, 1 : 9