உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவயிந்திரபுரத்துத் தெய்வநாயகன் 185

இங்ஙனம் எம்பெருமானின் திருமேனியை யொத்த புறச் சூழ்நிலையில் ஆழங்கால் பட்டவண்ணம் திருக்கோயிலை நண்ணுகின்றோம். எம்பெருமானின் நிலை பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐந்தாக இருப்பினும் இந்த ஐந்து நிலைகளிலுள்ள எம்பெருமான்கள் வேறுபாடற்ற ஒருவரே என்பது வைணவ தத்துவம். இதனை,

‘மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு

உண்டு உமிழ்ந்(து) அளந்தானை

தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்சு,தண்

திருவயிந்திர புரத்து

மேவு சோதியை’

(தானவர்-அரக்கர்கள்; மேவு-பொருந்தியுள்ள; சோதி-பரஞ்சோதி)

என்ற இறுதிப் பாசுரப்பகுதி தெளிவாக்குகின்றது. மூம் மூர்த்திகளாக நின்று படைப்பு, அளிப்பு, அழிப்புச் செயல்களைச் செய்பவனும் (பரநிலை), மூவுலகு உண்டு உமிழ்ந்தவனும் (வியூக நிலை), இவ்வுலகினை அளந்தவனும் (விபவநிலை), திருஅயிந்திரபுரத்துள் உறையும் சோதியும் (அர்ச்சை) ஒருவனே என்பது ஆழ்வார் கருத்து என்பதை அறிகின்றோம்.

இந்த உண்மையின் அடிப்படையில் பாசுரங்கள் தோறும் கூறப்பெறும் எம்பெருமானின் வெற்றிச் செயல்களையும் வீரச்செயல்களையும் நோக்குகின்றோம்; சிந்திக்கின்றோம். சுடர்விட்டு ஒளிரும் திருவாழியை ஏந்தியவன் எம்பெருமான்; செய்யவள் உறையும் திருமார்பன், வேதங்கள் ஒதும் பல்வேறு பொருள்களும் தானேயாக இருப்பவன்.” பாலனாகி ஏழுலகையும் உண்டு சிறிய ஆலிலையில் அறிதுயில் கொள்ளும் மாயவன் அவன்.” இரணியனின் மார்பை இரண்டு பிளவாக்கிப் பள்ளியிலோதிய அவன் மகன் சிறுக்கன் உய்யக் கருணை வெள்ளம் பாய்ச்சினவன்.’ மாவலியின் வள்ளண்மையைப் பயன்படுத்திக்கொண்டு அவனிடம் மூவடி நிலம் இரந்து பெற்று எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்து தன்னுடைனவாக்கிக் கொண்டவன்.’ கூனியின் க்ொடிய சொற்கேட்டுப் பிராட்டியோடு காட்டுக்கெழுந்தருளிய காளமேகம்.” பிராட்டியின் காரணமாகவே இலங்கையர்கோன்

22. மேலது . 3, 1 : 10 23. மேலது , 3.1 : 2

24. மேலது - 3.1 : 3 25. மேலது - 3.1 : 4 26. மேலது - 3.1 : 5 27. மேலது - 3.1 : 6