பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா அ 学岛

தச்சினார்க்கினியம்

இது, மேலதே போல்வதொரு விதியை உள்ளப்புணர்ச்சி பற்றித் தலைவிக்குக் கூறுகின்றது.

(இ-ள்.) அச்சமும் - அன்பு காரணத்திற்றோன்றிய உட்கும்; நானும்-காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ளவொடுக்கமும்; மடனும் - செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமையும்; முந்துறுத்த'-இம்மூன்றும் முதலியன; நிச்சமும்’ பெண்பாற்கு உரிய என்ப - எஞ்ஞான்றும் பெண்பாலார்க்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் (எறு).

'முந்துறுத்த’ என்றதனாற் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத பயிர்ப்பும், செயத்தகுவது அறியாத பேதைமையும், நிறுப்பதற்கு நெஞ்சுண்டாம் நிறையுங் கொள்க. மடன் குடிப் பிறந்தோர் செய்கையாதலின் அச்சமும் நானும்போல மெய்யுறு புணர்ச்சியை விலக்குவதாம். தலைவி உடையளெனவே தலைவன் பெருமையும் உரனும் உடையனாய் வேட்கைமீதுரவும் பெறு மாயிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப் புணர்ச்சிக்கு உரியளல்லளாமாயினும் இவ்விலக்கணத்தில் திரியாது நின்றேயும் புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடுங் கூறினார். இவற்றானே, புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் தலைவனைப்போல ஆற்றுவாளாயிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாங் கந்தருவமென்பது வேத முடியாதலின் இவ்வுள்ளப்புணர்ச்சியுங் கந்தருவமாம். ஆதலான் அதற்கு ஏதுவாகிய பெருமையும் உரனும் அச்சமும் நானும் போல்வன கூறினார். இச் சூத்திரம் இரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உலகியல் வழக்கே கூறலின் இக்கந்தருவம் இக் களவியற்குச் சிறப்பின்று, இனிக் கூறுவன மெய்யுறுபுணர்ச்சி பற்றிய களவொழுக்கமாதலின்.(அ)

1. முக்துறுத்த முதலியன. முந்துறுதல்' என்பது இளம் பூரணர் கொண்ட பாடம். 2. நிச்சமும் - கித்தமும்; எங்காளும்; தகர கரப் போலி, 3. இக்கந்தருவம் .

உள்ளப் புணர்ச்சியாகிய கங் தருவம்.