பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:శ్రీ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஆய்வுரை

இது, தலைமகட்குரியதோர் இலக்கணம் கூறுகின்றது.

(இ-ஸ்.) தனது நிறைகாவலுக்கு இடர் நேருமோவென்னும் அச்சமும் பெண்ணியல்பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையை நெகிழ விடாமையாகிய மடனும் முற்பட்டுத் தோன்றுதல் எக்காலத்தும் பெண்டிர்க்குரிய இயல்பாகும் என்பர் ஆசிரியர் எ-று.

எனவே, இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்பட்ட தலைமகனும் தலைமகளும் தம்மைக் காவாது வேட்கை மீதுார்ந்த நிலையிற்புண்லோ டும் வழிப்புற் சாய்ந்தாற்போலத் தமக்குரிய இப்பண்புகளை நெகிழவிடுதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற் காட்சியிலே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது உள்ளப்புணர்ச்சியளவே யொழுகி மணந்து கொண்ட பின்னரே கூடுதல் முறையாகும் என்பது இளம்பூரணர் கருத்தாகும். முந்துறுதல்-முற்பட்டுத் தோன்றுதல்; நிச்சமும்-நித்தமும்; நாள்தோறும். -

க. வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நானுவரை இறத்தல் கோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச் சிறப்புடை மரபினவை களவென மொழிப.

இளம்பூரணம்

என்-எனின், மெய்யுறுபுணர்ச்சி நிகழுங்காலம் உணர்த்துதல் நுதலிற்று. மேல், 'பெருமையும் உரனும் ஆடுஉ மேன’’ எனவும்,

'அச்சமும் நானும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப’’ (தொல். கள. அ)

எனவும் ஒதியவதனான் உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறுபுணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்ப என்றாராம். அவ்வழிச் சாக்காடெல்லையாகிய மெய்ப்பாடு வரின் மெய்யுற்றுப் புணரப்பெறு மென்பது உணர்த்திற்று.