பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா கக #శ్లో లే:

2) இனி,

'நிலத்தினும் பெரிதே வானினுமுயர்ந் தன் து

நீரினு ம. ரளவின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே'

(குறுந் 3)

'நாடன், தொல்லைத்திங்கள் நெடுவெண் ணிலவின்

மணந்தனன் மன்னெந் தோளே

இன்று முல்லை முகைதா றும்மே” (குறுந். 193) 'உவந்துறைவார் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் ஆர்'. (குறள். 1130)

என்பவற்றில் புணர்ந்த தலைவனலம் தலைவி பாராட்டுதல் காண்க.

(i) இனி, மடம் தப உரைத்தலாவது, பே ைத ைம யொழியப் பேசுதல். முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் கர வறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழியத் தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந் நிலைதான் மடம் தபுதல்.(மடம்=கள்ளமற்ற பிள்னைத்தன்மை. தபுதல் = கெடுதல், நீங்குதல்) அவ் வறிமடநிலையிற் றேர்ந் துரையாடலே மடம்தப உரைத்தலெனக் குறிக்கப்பட்டது.

பாராட்டெடுத்தல், மடம்தட உரைத்தல் முதலிய பலவாற் றானும் மறைத்த கூட்டம் புறத்துப் பொசிய, அயிர்த்தயலார் துற்றுதற்காளாதலும் அவர் பரிவற்ற பழிச்சொற் கேட்டு நானுதலும் தலைவிக்கு நேரும். அம்பலும் அலரும் கூறும் வம்பர் யாரும் தலைவனறியப் பேசத் துணியார். ஒருவாறு பேசினும், உரனுடைமையினால் அவன் பொருட்படுத்தானா தலின், அவர் கூற்றை அஞ்சுவது தலைவிக்கே பெரி து ம் இயல்பாம்.

(iii) ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்பது, தலைவி தன் களவொழுக்கை ஐயுற்றயலார் தூற்றம் பழிக்கு வெள்கு தல்.