உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奉ó。媒 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

அஃது.

"இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்

ஆய்மலர் உண்கண் பசலை காம நோயெனச் செப்பா தீமே' (அகம். 52)

என் புழி, வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது

3 அச்சத்தின கதல - தலைமகன்கண் வரும் ஏதமஞ்சி அவனை நீங்குங் குறிப்பும்:

"மன்று பாடவிந்து .....மயங்கி

இன்ன மாகவும் தன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிக் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்துப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரிவானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே' (அகம் . 128)

என்னும் பாட்டினை முழுதுங் கொள்க; அதன் கருத்தாவது நாம் அவர் இருளிடை வருத லேதமஞ்சி அகன்று அவலித் திருப்பவும் என்னையும் நின்னையுங் கேளாது என்னெஞ்சு போவானே னென்றவாறாயிற்று.

4. அவன் புணர்வுமறுத்தல் - இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கெழுந்த உளள நிகழ்ச்சியும்:

அது, தமரை யஞ்சி மறுத்தமையானும், இது வரைவுகடாவு தற்குக் கருத்தாகலானுந் திளைப்புவினை மறுத்தலோடு (265) இது வேற்றுமையுடைத்து. *

S SAAAAAA AAAAMMT AAAASAAAA AAAAA

4. முற் கூறப்பட்ட திளைப்பு:வீணை மறுத்தலாகிய அது, சுந்தத்தார்க்கு அஞ்சி மறுத்தது. அவன் புணர்வுமறுத்தலாகிய இது, வரைவுகடாதற் குறிப்பினதாகும்: இவ்விரண்டத்குமிடையேயமைந்த வேறுபாடு இதுவாகும்.