உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகரி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியன்

8. துஞ்சிச் சேர்தல் -மனையகத்துப் பொய்த்துயிலோடு மடிந்து வைகுதலும்:

துஞ்சுதலெனினும் ம. தலெனினும் ஒக்கும். வேண்டியவாறு கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனொடு புலந்தாள் போல மடிந்தொன்றுமாதலின் அதனைத் துஞ்சிச்சேர்தலென்றானென் புது: எங்ங்னமோவெனின்,

  1. *

என் மலைந் தனன் கொல் தானே தன் மலை ஆர நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றணனே' (குறுந் 151)

என் புழி, என்ன காரியம் மேற்கொண்டு வந்தானென்றமையின் இது துஞ்சிச்சேர்தலாயிற்று அல்லாக்கால் அங்ங்னஞ் சொல்லு தல் அன்பழிவெனப்படும்.

'ஆமிழி யணிவரை'என்னுங் குறிஞ்சிக்கலியினுட், A

'பின்னிதல் வேண்டுநீ பிரிந்தோணட் பென நீவிப் பூங்கண் படுதலு மஞ்சுவல் தாங்கிய அருந்துய ரவலந் துர்க்கின் மருங்கறி வாரா மலையினும் பெரிதே' (கலி 48)

என்னுஞ் சுரிதகமும் அது.

7. காதல் கைம்மிகல்-காமங்கையிகந்தவழி நிகழும் உள்ள நிகழ்ச்சியும்; அது.

'உள்ளி னுள்ளம் வேமே புள்ளா

திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி வான்றோய் வற்றே காமஞ்

ான்றோ ரல்லர்யா மரீஇ யோரே' (குறுந் 102)

கால வரும்.


4. குறி ஞ்சிப்பாட்டிலுள்’ என்றும் பாடம்.