உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要赢靠一 தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல்

பொருள்:-முட்டுவயிற் கழறல்=இற்செறிப்பு முதலிய கூட் டத்திற்கு இடையூறு உற்றுழி வரைவுவற்புறுத்தல்; முனிவுமெய்ந் நிறுத்தல்= வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்படு குறிப்பால் வற்புறுத்துணர்த்தல்; அச்சத்தின் அகறல்=அலரும் தலைவன் ஆற்றுறும் அஞ்சி, அவனணுகாது சேட்படுதல்; அவன் புணர்வு மறுத்தல் வ:ை யாது வந்தொழுகுந் தலைவன் கூட்ட மறுத்தல்; தாது.முனிவின்மை =ஒழியாது உடனுறையும் அழிவில் கற்புக்கூட்டம் கருதிய துதினை வெறாமை; அதாவது, வரைவு கருதி அவனுக்குத் தாதுய்க்கவும், அவன் தூது எதிரவும் விரும்பு தல்; துஞ்சிச்சேர்தல் = வரையா தொழுகும் தலைவன்வரவு மகிழா து மாழ்கிக்கூடல்:காதல் கைம்மிகல் - புணர்வு பெறாமல் வரைவு நீட்டிக்கவழிக் கையிகந்த காதலால் நையுநிலை; கட்டுரையின்மை - காதல்மிகையால் வாய்வாளாமை;என்றாயிரு நான்கே அழிவில் கூட்டம் = என வரும் எட்டும் வரைந்து பிரியா மனையற வாழ்க்கை விருப்பைக் குறிக்கும் மெய்ப்பாடாகும்.

குறிப்பு:-நான்கே என்பதன் ஏகாரம் தேற்றம். ஆயிடை ானல்போலச் செய்யுளாதலின் ஆயிரு என அகரச்சுட்டு நீண்டது. மேலே நகையே அழுகை' எனும் மூன்றாவது முதற் 'செல் வம் புலனே' என்னும் பதினொன்றாம் சூத்திரம் வரையிலும் அகப்புறத் திணைகளிரண்டிற்கும் பொது மெய்ப்பாடுகளை விரித்து, அவற்றின் பின் அகப்பொருளை அகத்திணை களவு கற் பென மூவியலாக வகுத்ததிற்கேற்ப அகவொழுக்க நிமித்தமாம் மெய்ப்பாடுகளையும் முத்திறப்படுத்தி, 'ஆங்கவை ஒரு பாலாக' (சூ. 12) எ ன் ப தி ல் அகப் பகு தி க் கு ப் பொதுவாய் அமைவனவற்றைத் தொகுத்துக்கூறி, பிறகு “புகுமுகம் புரிதல்' (சூ. 13) என்பது முதல் 'இன்பத்தை வெறுத்தல் (கு. 22) என்பதுமுடிய அகத்திற் கரவுக் காதலாம் களவினுக்குரியன தெளிக்கப்பட்டன. இனி, மறையாது உடனுறையும் கற்புக்காதற் சூரியன கூறத் தொடங்கி, முதலில் உலகறிய இடையறவின்றி உடனுறையின்ப மனையற வாழ்க்கைவேட்கையால வரைவுவற். புறுத்துந் தலைவிக்குரியன இதிற் கூறப்படுகின்றன. இதன் பிற்சூத்திரங்களால் வரைந்துடன் வாழும் திருந்திய கற்புக்குரியன

1. முட்டு-முட்டுப்பாடு; இடை ஆது.

2. முனிவு-கில அப்பு.