பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா உங் 噶轟密

விளக்கப்பெறும். எனவே, முன் களவுக்குரியவற்றிற்கும் பின் களவின் வழித்தாய கற்பிற்குரியவற்றிற்கும் இடையே, அச் சிறந்த கற்பறவாழ்வுதரும் வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடு கூறும் இச்சூத்திரம் அமைந்த செல்வி யுணர்ந் துவத்தற்பாற்று. இனி, அழிவில் கூட்டம்' என்றது, களவிற்போலப் பிறர்க்கு மறைத்து இடையறவுபடுங் கரவுக்காதலைப்போலாது, உலகறிய ஒளியாது ஒழியாதுடனுறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பு. கூட்டம்' இங்குக் கூட்டம் தரும் வரைவுவேட்கைக்

குறிப்பிற்காதலால் ஆகுபெயர்.

இனி, முட்டுவயிற் கழறலுக்குச் செய்யுள் :

'............ ....................தாரை

அறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் கண்ணாறு நெய்தல் கதிரொடு தயக்கும் தண்ணந் துறைவற் காணின், முன்னின்று கடிய கழற லோம்புமதி; தொடியோள் இன்ன ளாகத் துறத்தல் தும்மிற் றகுமோ வென்றனை துணிந்தே."

(குறுந். 296)

இதில், சிறைப்புறத்தலைவன் வரைவு நீட்டம் கடிந்துகழறற்பாற் றெனத்தலைவி தோழிக்குக் குறிப்பாகச் சுட்டுவதறிக..'பன்முட் டின்றால் தோழிநங் களவே' (அகம் 122) என்னும் அகப்பாட் டடிக்குறிப்பு மிதுவே.

முனிவு மெய்ந்நிறுத்தற்குச் செய்யுள்:

'விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்

கடனும் பூணாம், கைந்நூல் யாவாம். புள்ளும் ஒராம், விரிச்சியும் நில்லாம், உள்ளலும் உள்ளா மன்றே, தோழி! உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின் றிமைப்புவரை யமையா நம்வயின் மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே."

(குறுந். 218,