பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 蠍 தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல்

"ஒண்டொடி நாணிலன் மன்ற இவன்;

ஆயின் ஏஏ ! பல்லார் நக்கெள்ளப் படுமடன்மா வேறி நல்காள் கண்மாறி விடின் எனச் செல்வானாம் எள்ளி நகினும் வருஉம், இடையிடைக் கள்வர்போல் நோக்கினும் நோக்கும்'

எனும் (31) குறிஞ்சிக்கலியில், பராவுதற்குரிய தலைவனைத் தோழி எள்ளல் காண்க.

"............மகளிர்

நலனுண்டு துறத்தி யாயின் மிகநன் றம்ம மகிழ்ந:நின் குளே’

எனும் ஒரம்போகியார் குறும்பாட்டிலும் (குறுந் 384) பராவுந் தலைவனை இழியாமல் எள்ளுவதறிக.

நகையா கின்றே தோழி......

மம்மர் நெஞ்சினோன் நொழுதுநின்றதுவே" (அகம். 56)

తణ్ణి! மகப்பாட்டடியுமதுவே. இளமை, அறிவுமுதிராப் பிள்ளைமை, பேதைமை, அறிவின்மை (Stupidity) : மடம், ஐயுறாது 5th Häuät. (Simplicity or innocence). பேதைமை உவர்ப்பிக்கும்; மடம் உவப்புதவும்; எள்ளல் முதல் நான்கும் மகிழ்லோடு மருவும் பெற்றிய, இதனை நகையெனப்படுதல் வகையா தெனினே நகையொடு நால்வகை நனிமகிழ்வ துவே" என்ற தொல்லை நல்லுரையானுமறிக.

புறத்தே நகையாய் முகிழ்க்கும்.குறி ஒன்றே அகத்து நிகழு மிந் நால்வகை புணர்வும் தோற்றற்கேற்றதொரு மெய்ப்பாடா மெனு மியல்பைச் சுட்டி, "உள்ளப்பட்ட நகை நான்கென்ப’’ என்று அவற்றினியலும் வகையும் தோற்றுங்குறியும் ஒருங்கு விளக்கப்பெறுதலறிக. இதில் என்ப' எனும் வினைக்கு, 'உள்ளுறு முணர்வை நுண்ணிதி னுணரும் புலவர்' எனும் எழுவாய் இடநோக்கி அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. மெய்ப்பாட்டியலிறுதிப் புறனடைப் பொதுச் சூத்திரத்தில், உள்ளுணர்வின் நன்னயப் பொருள்கோள் தெரியின், திண்ணிதி

مستم، جیب حجم بسیه سسته هستم.

.ே இஃது இனம்பூரணர் உரைமேற்கோளாகும்,