உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா - 禽、

னுணர்வார்க்கல்லது எண்ணற்கரிதாமெனக் கூறுதலால், அதற்கேற்ப ஈண்டு மெய்ப்பாட்டியல் கூறுபவர் உள்ளுறுமுணர்வை நுண் ணிதினுணரும் புலவர் ' என்றேற்புடை எழு வா ய் கொள்ளப்பட்டது. இதில் என்று என்பது பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல்; ' என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்றுவழியுடைய எண்ணினுட் பிரிந்தே' என்பது இடையியற் சூத்திரம். ) جو ஆய்வுரை : இது, நகைக்குரிய பொருள் வகை உணர்த்துகின்றது.

(இ-ள்.) நகை யென்பது, எள்ளல், இளமை, பேதைமை, மடன் என இந்நான்கும் பற்றி நிகழ்தலின் நால்வகைப்படும் என்பர் ஆசிரியர், எ-று.

எள்ளல் என்பது, இகழ்தற்குறிப்பு இளமையென்பது, விளை வறியாத இளம்பருவ இயல்பு. பேதைமை யென்பது, வாழ்க்கையில் இன்றியமையாது அறியவேண்டியவற்றை அறியாமை, மடன் என்பது, பிறர் அறிவிகக அறிந்து தான் அறிந்தவற்றைப் பிறர்க்குப் புலப்படுத்திக் கொள்ளாமை. இனி மடன் என்பது, பொருளின் உண்மைத் தன்மையறியாது பிறழக் கொள்ளுதல் என்றும், பேதைமையென்பது, கேட்டதனை ஆசாய்ந்துணர்தலின்றி அவ்வாறே மெய்யாகக் கொள்ளுதல் என்றும் இவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறுவர் இளம்பூரணர். மெய்ப்பாடாகப் புறத்தே வெளிப்படும் நகை ஒனரேயாயினும், தன் தோற்றத்திற்குரிய காரணங்களாக அகத்தே நிகழும் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் இந்நால்வகை மனக்குறிப்புக்களும் நுண்ணிதாகப் புலப்படுதற்குரிய நிலையில் நால்வகைப்பட்டுத் தோன்றும் என்பார், 'உள்ளப்பட்ட நகை நான் கென் ப' என்றார் தொல் காப்பி. யனார். இவ்வாறே அழுகை முதல் உவகையிறாகவுள் ள ஏனைய மெய்ப்பாடுகளும் தத் தம் தோற்றத்திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப் பொருள்களுக்கேற்பப் புறத்தே நால்வகைப்பட நிகழ்வன என்னும் நுட்பத்தினை அவற்றின் இயல்புரைக்கும் சூத்திரங்களில் ஆசிரியர் புலப்படுத் தியுள்ளமை கூர்ந்து நோக்க த த குவதாகும்.

இனி, எ ஸ் எால் பற்றிய நகை யென்பது, தான் பிறரை இகழ்ந்து நகுதலும் பிறரால் தான் இகழப்பட்ட நிலையில் தான்