உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாஜ் தொல்காப் பியம்-மெய்ப்பாட்டியல்

நகுதலும என இரண்டாம். இளமைபற்றிய நகை யென்பது, தன் இளமை காரணமாகப் பிறரைக் கண்டு நகுதலும் பிறரது இளகை கண்டு தான் நகுதலும் என இருவகைப்படும். பேதைமைபற்றிய தகையென்பது, தன்பேதைமை பொருளாகத் தோனறுவதும் பிறர் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் என இரு திறப்படும். மடமை பற்றிய நகை யென்பது தன் கண் தோன்றிய மடமை காரணமாகவும் பிறர் கண் தோன்றிய மடமை காரணமாகவும் இருவகைப்படும் என எடுத்துக் காட்டு த தந்து விளக குவர் பேராசிரியர்.

இளம்பூரணம்

டு. இழிவே இழவே அசைவே வறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே.

என்-எ னின். இது அழுகையா மாறும் அதற்குப் பொருளு

முணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.) இழிவு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு

பொருண்மையும் அழுகைக்குப் பொருளாம் என்றவாறு.

இழிவு என்பது-பிறர் தன்னை யெளியன் ஆக்குதல்ாற்

பிறப்பது.

இழவாவது-உயிரானும் பொருளானும் இழத்தல்.’ அசை வென்பது -தளர்ச்சி. அது தன்னிலையிற்றாழ்தல்.

வறுமை என்பது - நல்குரவு. இவை ஏதுவாக அழுகைபிறக்கும் என்றவாறு." இதுவுந் தன்மாட்டுற்றதனானும் பிறர்மாட்டுற்றதனானும்

பிறக்கும்."

.ே "இனிவே" என்பது பேராசிரியருரையிற் கண்ட பாடம்.

1. உயிரையாவது பொருளையாவது இழத்தல்.

£3.

2. இழிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் இவை காரணமாக அழுகை பிறக்கும் என்பதாம்.

.ே அழுகைக்குக் கா சணமாகிய இளிவு முதலாயின தன் கண்ணும் பிறர் கண்ணும் என கரிடமும் கிலைக்களமாகக் கொண்டு தோன்றும் என்பதாம்.