உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

體議 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

ஊடற்கண்ணும் வெகுளி தோற்றுமால் எனின், அஃது இன்பத்திற்குக் காரணமாதலால் தலைமகள் புருவதெரிவும் வாய்த்துடிப்புங் கண்ட தலைமகற்கு வெகுட்சி பிறவாது உவகை பிறக்கும். தலைமகன் வெகுளுவனாயின் அதன்பாற் படும்.

'உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்

சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமந் ததையத் தாக்கி முரசமொ

டொருங்ககப் படேன் னாயின்' (புறம். எஉ)

என்பது வெகுளிபற்றி வந்தது. பிறவு மன்ன. (so)

பேராசிரியம்

இஃது ஏழாம், எண்னு முறைமைக்கண் நின்ற வெகுளி உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ன்.) உறுப்பறையென்பது, கைகுறைத்தலுங் கண் குறைத்தலு முதலாயின; குடிகோளென்பது, தாரமுஞ் சுற்றமுங் குடிப்பிறப்பும் முதலாயலற்றுக்கட் கேடுகுழ்தல்; அலையென். பது, கோல்கொண்டலைத்தன் முதலாயின; கொலையென்பது அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். இவை நான்கும் பொருளாக வெகுளி பிறக்கும்(எ-று.)"

வெறுப்பின் என்றதனான் ஊடற்கண்ணுந் தோன்றும் வெகுளி முதலாயினவுங் கொள்க."

"முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று' o (கவி. 52) என்பது உறுப்பறையான் வந்த வெகுளி.

SAASAASAA AAAASLLLLLS MA AMMMS gALLLAAAAAL

1. உறுப்பு அறை - கை முதலிய அங்கங்களை அறுத்தல். குடி கோள் - குடும் த் துக்குக் கேடு ஆழ்தல். அலை - அலைத்தல்; துன்புறுத்தல், உயிருடன் பின் கீ க்குதலாகிய கொலை முற் கூறிய மூன்றனுள் அடங்குதலால் கண்டுக்கொலை என்பதற்கு அறிவும் புகழுமுதலாயினவற்றைக்கொன்றுரைத்தல் என விளக்கம் தக்தார் பேராசிரியர். கொன்றுரைத்தல் - அழித்துப் பேசுதல்.

2. "வெறுப்பின் வந்த வெகுளி' அடைபுணர்த்தே தின மையால் வெறுப்பின் விளைவாகிய ஊடற்கண்னும் வெகுளிதோன்றும் என்பதாம்.